அடல் பிமித் வியாக்தி கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் வேலையிழந்தவர்கள் உடனடியாக பணம் பெறுவதற்கு நடைமுறைகளில் சில தளர்வுகளை ஏற்படுத்தி இருப்பதாக தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம் தெரிவித்துள்ளது.
வேலை இழந்தவர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் 15 நாட்களுக்குள் தொகை அளிக்கப்படும் என மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் சந்தோஷ் கங்வார் பிடிஐ பேசுகையில், “வேலையிழந்தோருக்கு அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 15 நாட்களுக்குள் பணம் வழங்கப்படும்.
கொரோனா பாதிப்பால் வேலையிழந்தவர்களுக்கு நிவாரணம் அளிக்க இந்த திட்டம் மிகவும் பயன்படும். இந்தத் திட்டத்தின் கீழ் நிவாரண தொகை கோரும் மக்கள் அடுத்த ஜூன் மாதம் வரை பயன்படுத்தலாம்.டிசம்பர் 31 க்கு பிறகு இதில் தளர்வுகள் இருக்காது எனவும் கூறியுள்ளார்.
இதற்கு முன் ஊதியத்தில் இருந்து 25 % தொகை வழங்கப்பட்டது. தற்போது 50 %உயர்த்தப்பட்டுள்ளது. இது மார்ச் 24ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை பொருந்தும். இதற்கு முன் வேலையிழந்தவர்கள் 90 நாட்களுக்கு பிறகு விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. தற்போது, வேலையிழந்த 30 நாட்களிலேயே விண்ணப்பிக்கலாம்.
இதற்கு முன், வேலையில் இருந்த நிறுவனங்கள் வாயிலாகத்தான் விண்ணப்பிக்க முடியும். ஆனால் தற்போது தொழிலாலர்களே நேரடியாக விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் வேலை இல்லாத மக்கள் பயன் பெறுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.