சீனாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும்

0
71

சீனாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும் இந்தியா: தலைமை தளபதி பிபின் ராவத் பேட்டி

சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் தோல்வியடைந்ததால் இராணுவ நடவடிக்கைக்கு தயார் என்று தலைமை தளபதி பிபின் ராவத் பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார் . இந்திய ராணுவம் மற்றும் தூதரக மண்டலத்திலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் ராணுவ நடவடிக்கைக்கு பரிசீலிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய எல்லை பாதுகாப்பு பகுதியில் சீன இராணுவத்துடனான முதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதேபோல் சீன தரப்பில் ஏராளமான வீரர்கள் உயிரிழந்துள்ளனர் .இதனால் சீன இந்திய எல்லையான லடாக்கில் பதற்றம் நிலவி வந்தது. எனவே அமைதியை நிலைநாட்டுவதற்காக இருநாட்டினர் தரப்பிலும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர் .

இந்தியாவின் பாதுகாப்பு படை தலைவர் சனிக்கிழமையன்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் மூன்று முக்கிய படைத் தலைவர்களை சந்தித்து லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு நிலையை நிலைப்பாடு குறித்து விசாரித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்திய சீன எல்லையில் வரம்பு மீறியதாக பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. ஊடுருவலை தடுக்கவும், கண்காணிப்பை அதிகரிக்கப்படும் தேவையான நடவடிக்கை ஏற்பட்டு வருவதாக அவர் கூறினார்.

எல்லைப் அமைதிப் பேச்சுவார்த்தையில் தோல்வியடையும் பட்சத்தில் இராணுவ நடவடிக்கைகளும் தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் படை தலைவர் ஆகியோர் விருப்பத்துடன் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.