உங்கள் டேட்டாக்களை கூகுள் ட்ரைவில் சேமித்து வைப்பவர்களா நீங்கள்:? பெரிய ஆபத்து! எச்சரிக்கை!

0
120

உங்கள் டேட்டாக்களை கூகுள் ட்ரைவில் சேமித்து வைப்பவர்களா நீங்கள்:? பெரிய ஆபத்து! எச்சரிக்கை!

உலகின் முன்னணி இணையதள நிறுவனமான கூகுள்,போன் ஸ்டோரேஜ் (phone storage) இல்லதவர்களுக்கும்,
டேட்டாக்களை போன் இல்லாமல் எடுக்கும், வசதிக்காகவும் ஒவ்வொரு இமெயிலிருக்கும் 15GB ஸ்டோரேஜ்(STORAGE) கூகுள் டிரைவ்(GOOGLE DRIVE) மூலம் இலவசமாக கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.15GB-பிற்கும் மேற்பட்ட டேட்டாக்களை சேவ்(save) செய்ய விரும்புவோரர் கூகுள் நிறுவனத்திடம் கட்டணம் செலுத்தி சேவையைப் பெற்றுக் கொள்ளும் வசதியும் உண்டு.

ஆனால் தற்போது இந்த சேவையில் சில குறைபாடுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த கூகுள் ட்ரைவில்,ஹேக்கர்கள் ஹேக் செய்வதற்கு வசதியாக
மால்வேர்களை நிறுவுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூகுள் டிரைவில் இந்த மால்வேர்களை நிறுவினால் பயனாளர்களின் ஒட்டுமொத்த கணக்குகளும் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றும், இதன் மூலம் கூகுள் ட்ரைவ் பயனாளர்களின் ஒட்டுமொத்த டேட்டாகளும்,திருடப்பட வாய்ப்புள்ளதாகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுமட்டுமின்றி மற்றொரு அதிர்ச்சி என்னவென்றால் ஹேக் செய்யப்பட்ட கூகுள் டிரைவில் இருந்து மற்றவர்களுக்கு files -யை அனுப்பும் பொழுது
மால்வேரானது,files-யை
பெற்றுக்கொள்ளும் அக்கவுண்டிற்குள்ளும் உட்புகுந்து,அந்த அக்கவுண்டையும் (account)ஹேக் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இதனை தடுக்க தற்போது கூகுள் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

 

Previous articleBitcoin பரிவர்த்தனையில் ஈடுபடுவர்கள் குற்றவாளிகள்! காவல்துறை எச்சரிக்கை!
Next articleபொது முடக்கத்தையும் போக்குவரத்து தடையையும் நீக்க வேண்டும் என வைகோ கோரிக்கை