மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க எம்.எல். ஏக்கள் மீதான குட்கா உரிமை நோட்டீஸ் ! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

0
109

மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீயை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்தது.

சட்டசபைக்குள் குட்கா எடுத்துச்சென்ற விவகாரத்தில் உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை எதிர்த்த எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் 21 திமுக எம்.எல்.ஏக்கள் மனு தாக்கல் செய்த வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ‘குட்கா’, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் எளிதில் கிடைப்பதாக திமுக தலைவர் குற்றம் சாட்டினார்.

அதனை நிரூபிக்கும் வகையில் சட்டசபைக்குள் குட்காவை திமுக தலைவர் மற்றும் 21 எம்.எல்.ஏக்கள் எடுத்துச்சென்றனர். இதனையடுத்து திமுக தலைவர் மற்றும் 21 எம்எல்ஏக்களுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சனை எழுந்தது. எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேரிடம் விளக்கம் கோரி சட்டசபை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது.

இதனைத்தொடர்ந்து நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2017 செப்டம்பர் 7ஆம் தேதி மனு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி எம். துரைசாமி திமுக எம்.எல்.ஏ விற்கு ஆதரவு அனுப்பிய உரிமையை நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என இடை காலமாக உத்தரவிட்டார்.

மேலும் இந்த தடையை நீக்கக் கோரி பேரவை செயலாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்தது. பின்னர் இந்த வழக்குகள் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது. அது தற்போது தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய குழு இவ்வழக்கை விசாரித்து வத்தனர்.

இந்நிலையில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அவர்கள் இன்று தீர்ப்பு வழங்கினர். உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் குட்கா சட்டப்பேரவைக்கு கொண்டு வந்ததாக மு க ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்எல்ஏக்கள் மீதான வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது என்றும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதில் சில அடிப்படை தவறுகள் உள்ளதால் மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதில் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு உரிமை குழு புதிய நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் ,புதியதாக அனுப்பப்படும் நோட்டீசுக்கு மனுதாரர்கள் ஆஜராகி தங்கள் வழக்கு முன்வைக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியது.

 

 

Previous articleகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலன் வீட்டாருக்கு இளம்பெண் செய்த காரியம் தெரியுமா?
Next articleபள்ளிகள் திறந்தாலும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயாராக இல்லை என பெற்றோர்கள் தரப்பில் தகவல்