Cinema

ஹீரோக்களை பின்னுக்குத் தள்ளி ஹீரோயின்களின் 4 படமும்  OTT தளத்தில் ரிலீஸ்!

கொரோனா தாக்கத்தால் கிட்டத்தட்ட 100 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகள் அனைத்திலும்  மூடப்பட்ட நிலையில், படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் செய்யவிருந்த படங்கள் அனைத்தும் தற்போது OTT தளத்தில் பீலிங் செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அந்த வரிசையில்  ஹீரோக்களின் படங்களை பின்னுக்குத்தள்ளி ஹீரோயின்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள நான்கு முக்கிய திரைப்படமானது தற்போது அடுத்ததாக OTT கன்னத்தில் லேசாக உள்ளது.கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள இரண்டு படங்கள் மிஸ்  இந்தியா மற்றும் குட்லக் சஹி. குட்லக் சஹி படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு வீராங்கனையாக தனது நடிப்பில் பட்டையைக் கிளப்பியுள்ளார். இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாவது படமாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகவுள்ள  பூமிகா படம் ஆகும். இந்தப்படம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு 25-ஆவது படம் என்றதால்  கதாநாயகிக்கு அதிக அழுத்தம்  கொடுத்து, பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

நான்காவது  படம்,ரெஜினா காசான்ட்ரா நடிப்பில் உருவாகியுள்ள சூர்ப்பனகை என்ற படம். இந்த படத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ரெஜினா  பழங்கால நிகழ்வுகளை கண் முன் கொண்டு வரும் வகையில் படமானது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள இந்த நான்கு படமும் OTT தளத்தில் வரிசையாக ரிலீஸ்  ஆக உள்ளது.

 

Leave a Comment