நாம் அன்றாடம் பயன்படுத்தும் தயிரில் இத்தனை நன்மைகளா:? தெரிந்துகொள்ளுங்கள்!

0
130

நாம் அன்றாடம் பயன்படுத்தும் தயிரில் இத்தனை நன்மைகளா:? தெரிந்துகொள்ளுங்கள்!

தயிர்,பாலில் இருந்து கிடைக்கக்கூடிய ஒரு பொருள் ஆகும்.தயிர் மிகக் கடினமான உணவு எளிதில் ஜீரணம் ஆகாது என்று தான் நாம் தெரிந்திருப்போம்.ஆனால் ஜீரணக் கோளாறுகளை சரிசெய்வதில் தயிரும் முக்கிய பங்காற்றுகின்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?வாங்க தயிரின் நன்மைகளைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

தயிரின் நன்மைகள்!

* தயிரில் அதிகளவு கால்சியம் இருப்பதினால் எலும்புகளின் வலிமைக்கும் மற்றும் பற்களை வலுப்படுத்த முக்கிய பங்காற்றுகிறது.

எனவே குழந்தைகளுக்கு அதிக அளவில் தயிர்சாதம் கொடுக்கும் பொழுது அவர்களின் எலும்புகள் விரைவில் வளர்ச்சியடைந்து நல்ல வலுபெறும்.

* தயிரில் நன்மை பயக்கும் ஏராளமான பாக்டீரியங்கள் உள்ளன.இந்த பாக்டீரியாக்கள் நம் உடலில் செரிமான அமைப்பை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. இது செரிமான கோளாறுகளில் இருந்து நம்மை விடுவிக்கின்றது.

* தயிரை நம் அன்றாட உணவில் தவறாமல் எடுத்துக்கொள்ளும் பொழுது,மற்ற உணவுகளிலிருந்து ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களை விரைவில் உறிஞ்சி நம் உடலுக்குப் பலத்தைத் தரும் திறன் இதற்கு உண்டு.தயிரை தனியாக சாப்பிடுவதைவிட மற்ற உணவுகளில் கலந்து சாப்பிட்டால்,நிறைய பலன்கள் கிடைக்கும்.

* இது வயிறு சம்பந்தபட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல மருந்தாக பயன்படுகின்றது.

* தயிர் சாப்பிடுவதால் யோனி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

* நாள்தோறும் நாம் உணவாக தயிரை எடுத்துக் கொள்ளும் போது நம் உடலில் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க பயன்படுகின்றது.

* தயிரை சாப்பிடும்பொழுது சிலருக்கு சளி மற்றும் அடிக்கடி இருமல் ஏற்படுவதாக உணர்வர்.அவ்வாறு உணரும் நம்பர்கள்,தயிரை புளிக்க விடாமல், புதிதாக தயாரித்த தயிரை குளிரூட்டாமல் சாப்பிட்டால்,சளி மற்றும் இருமல் பிரச்சனை இருக்காது.

* மிகவும் ஒல்லியாக இருப்பவர்கள் அன்றாடம் உணவில் தயிரை எடுத்துக் கொண்டால் விரைவில் எடை போடும்.ஆனால் எடைக்காக தயிரை எடுத்துக் கொள்பவர்கள் பாக்கெட் பாலையோ அல்லது ஸ்கிம் செய்யப்பட்ட பாலில் இருந்து தயாரிக்கும் தயிரை எடுத்து கொள்ள கூடாது.நேரடியாக பசுமாட்டில் இருந்து கிடைக்கும் பாலை வாங்கி அதில் தயாரிக்கும் தயிரைதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

 

Previous articleஇந்தியாவிற்கு எதிராக திரும்பும் துருக்கி
Next articleகரீபியன் லீக் : மழையால் 8 ஓவராக குறைக்கப்பட்ட போட்டி