மத்திய அமைச்சர் முன்னிலையில் ரஃபேல் விமானங்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்க முடிவு. !

0
137

ரஃபேல் ஜெட் விமானங்கள் முறையாக இந்திய விமானப்படையில் வரும் செப்டம்பர் மாதம் 10 – ஆம் தேதி சேர்க்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு ரூ.59,000 கோடி மதிப்பில் பிரான்சிடமிருந்து 36 ரபேல் ஜெட் விமானங்கள் வாங்க முடிவு செய்தது. இதனையடுத்து 5 விமானங்கள் கடந்த ஜூலை 29 ஆம் தேதி ஆம்பாலா விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. ஆகஸ்ட் 15ஆம் தேதி ராணுவ அணிவகுப்பில் ரபேல் விமானங்கள் இடம்பெறும் என பலர் எதிர்பார்த்தனர். இருப்பினும் அணிவகுப்பில் காண்பிக்கப்படவில்லை. ஜெட் விமானங்கள் வருகை நிகழ்வில் ஆர்.கே.எஸ்.பகதூர் மற்றும் பிற மூத்த விமானப்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த ரபேல் ஜெட் விமானங்கள் மத்திய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்தியாவில் விமானப்படையல் சேர்க்க வரும் செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த மாதம் விமானம் வந்தடைந்தவுடன் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ,இந்த விமானங்கள் இந்திய விமானப்படையின் திறன்களை மேம்படுத்துவதோடு, நாட்டிற்கு வரும் எந்த விதமான அச்சுறுத்தலையும் தடுக்கும் என்று உறுதிபட கூறினார்.

இந்த விமானம் பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு கிட்டத்தட்ட 8,500 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து வந்துள்ளது. முதல் கட்டமாக மொழிக்கு நா முதல் அல்தாபி வரை 5,800 கிலோமீட்டர் கடந்து வந்தது.

ஜூன் 1997 இல் ரஷ்ய சுகோய்- 30 ஜெட் விமானங்கள் சேவை நுழைந்த ,பின்னர் 23 ஆண்டுகள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்ட முதல் இறக்குமதி ஜெட் விமானங்கள் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅதிரடி சரிவில் தங்கம்! ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
Next articleவெள்ளை மாளிகையில் டிரம்ப் கொரோனா வைரஸ் குறித்து ஆவேச பேச்சு