கர்நாடகா குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? இன்று வாக்கெடுப்பு!

0
140

கர்நாடகா குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? இன்று வாக்கெடுப்பு!

கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 16 MLA கள் பதவியை விட்டு விலகியதால் ஆளும் குமாரசாமி ஆட்சிக்கு சிக்கல் நிலவி வருகிறது. இதை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி குன்ஹா சபநயரக்கு தகுதி நீக்கம் பற்றி உத்தரவு இட முடியாது. என கூறினார் .

அதாவது அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தொடர்ந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ராஜினாமா மீது நடவடிக்கை எடுக்காததன் மூலம், அரசுக்கு ஆதரவாக எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கச் செய்ய சபாநாயகர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

இந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், நேற்று காலை 10.30 மணிக்கு சபாநாயகருக்கு உத்தரவு இட முடியாது என கூறினார்.

அதனைத்தொடர்ந்து இன்று குமாரசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில், இன்று காலை 11 மணி அளவில் சட்டசபையில் வாக்கெடுப்பு நடைபெறும் .இதனால் கர்நாடகாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

16 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கும் பட்சத்தில் ஆளும் அரசின் பலம் 101ஆக குறையும். அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கட்சி கவிழும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, பெங்களூருவில் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏக்களுடன் பாஜக தலைவர் எடியூரப்பா சட்ட மன்ற உறுப்பினர் விவாதம் செய்தனர்.

இன்று காலை 11 மணி அளவில் கர்நாடக சட்டமன்றத்தில் ஆளும் குமாரசாமி அரசு மீது நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடைபெறும். என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Previous articleநீங்கள் வாங்கிய ஆன்லைன் பொருள் தரமானதா? அப்படி சந்தேகம் என்றால் இதை படியுங்கள்!
Next articleதீவிரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுத்தால் திமுக ஏன் பதறுகிறது? திமுக எம்.பி ராசாவுக்கு அமித்ஷா கொடுத்த பதிலடி