Cinema

தளபதி65 படத்தில் விஜய்க்கு ஜோடி இந்த நடிகையா? கடுப்பான ரசிகர்கள்! 

Photo of author

By Parthipan K

இளைய தளபதியின் 65 ஆவது  படமானது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்திற்கு விஜய்  உடன் கதாநாயகியாக பத்து வருடங்களுக்குப் பிறகு நடிகை தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜய் மற்றும் சூர்யா இருவரும் சுறா படத்தின் மூலம் ஏற்கனவே ஜோடி சேர்ந்துள்ளனர். ஆனால் அந்த படம் படு தோல்வியை கண்டது.

இருந்தபோதிலும் அந்தப் படத்திற்குப் பிறகு மீண்டும் இருவரும் ஜோடியாக விஜய்யின் 65 வது படத்தில் இணைகின்றனர்.

இளைய தளபதியின் மாஸ்டர் படத்திற்காக அவருடைய ரசிகர் பட்டாளமே காத்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில் இளையதளபதியின் 65ஆவது  படத்தினுடைய இப்படி ஒரு செய்தியை கேட்ட ரசிகர்கள் சந்தோசப்படுவதா? இல்ல கவலைப்படுவது? என்ற மனநிலையுடன் இருக்கின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு தமன்னா  மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்த சூழ்நிலையில் விஜயின் 65 ஆவது படத்தின் கதாநாயகியாக தமன்னா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற புதிய அப்டேட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

 

அரிய புகைப்படங்களை வெளியிட்ட எவர்கிரீன் ஃபேவரிட் ஹீரோயின்!! ரசித்துப் பார்க்கும் ரசிகர் கூட்டம்!!

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 76472 பேருக்கு கொரோனா தொற்று

Leave a Comment