தலையில் இடி விழுந்தது போல இருக்கு.. என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை!! கண்ணீர் விடும் இமான் அண்ணாச்சி!

0
120

கொரோனா பாதிப்பினால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கன்னியாகுமரி காங்கிரஸ் எம் பி வசந்தகுமார் நேற்று இரவு 7 மணி அளவில் காலமானார்.

இறுதிகட்டமாக அவருக்கு  கொரோனா  பரிசோதனை செய்தபோது  நெகட்டிவ் ரிசல்ட் கிடைத்ததால் அவருடைய உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அவருடைய உடல் அவரின் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

வசந்தகுமாரின் உடலுக்கு பல பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் குடியரசுத் தலைவர், பிரதமர்,முதலமைச்சர் என தொடங்கி காங்கிரஸ் தொண்டர்கள்  வரை பலரும் தங்களது இரங்கலைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

இவருடைய அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்த இமான் அண்ணாச்சி, தலையில் இடி விழுந்தது போல் இருக்கிறது எப்படி இதனை ஏற்றுக் கொள்வது அவருடைய  குடும்பத்தினருக்கு இவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாக இருக்கும் என்றும் பல தேர்தல் பிரச்சாரங்களில் வசந்த  குமாருடன் ஒன்றாக தங்கி இருந்த அனுபவத்தை கண்ணீர் மல்க பகிர்ந்துள்ளார்.

வசந்தகுமார் காங்கிரஸில் எம்பியாக மட்டுமில்லாமல் வசந்த் அன்கோ நிறுவனத்தின் உரிமையாளராகவும் பெரிதும் பிரபலமானார். இவருடைய மகன் விஜய் வசந்தகுமார் பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருகிறார்.

 

Previous articleமக்களுக்கு ஒரு இனிய செய்தி ! இனி அமோசான் பேடிஎம் மூலம் கேஸ் முன்பதிவு!
Next articleதிமுகவின் முக்கிய அரசியல் புள்ளியான எம்.பி, அவரது மனைவிக்கும் கொரோனா உறுதி: அதிர்ச்சியில் உறைந்த திமுகவினர்!!