திமுகவின் முக்கிய அரசியல் புள்ளியான எம்.பி, அவரது மனைவிக்கும் கொரோனா உறுதி: அதிர்ச்சியில் உறைந்த திமுகவினர்!!

0
134

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் தினந்தோறும் சராசரியாக 6 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

 

அந்த வகையில் பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், கட்சி நிர்வாகிகளும் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

நேற்று வசந்த் அன் கோ நிறுவனரும் காங்கிரஸ் எம்பியுமான வசந்தகுமார் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

மேலும் எஸ்.பி பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில்,  திமுகவின் முக்கிய புள்ளியாக பார்க்கப்படும் கட்சி நிர்வாகியும், அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனுக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது.

 

Corona confirms MP and his wife about DMK's main political point: DMK frozen in shock !!
Corona confirms MP and his wife about DMK’s main political point: DMK frozen in shock !!

அவரைத் தொடர்ந்து அவரது மனைவிக்கும் கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இருவரும் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருவருக்கும் கொரோனா வின் ஆரம்ப கட்ட அறிகுறிகளுடன் இருப்பதால், தற்போது அவர்களின் உடல் நிலை சீராக இருந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த செய்தியை அறிந்த திமுகவில் ஜெகத்ரட்சகனின் ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியிலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

Previous articleதலையில் இடி விழுந்தது போல இருக்கு.. என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை!! கண்ணீர் விடும் இமான் அண்ணாச்சி!
Next articleமீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை! ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!