மேலும் ஒரு முதல்வருக்கு கொரோனா பாதிப்பு!!

0
135

கோவா முதல்வர் பிரமோத் சாவந்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நோய் தொற்றுக்கு சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்துக்கு (வயது 47) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது தொற்று உறுதியாகியுள்ளது. அறிகுறி ஏதும் இல்லாததால் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் வீட்டிலிருந்தபடியே தனது அரசு பணிகளை தொடர்ந்து செய்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த சில தினங்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளான முதல்வர்களில் நான்காவது முதல்வராக சாவந்த் இருக்கிறார்.

Previous articleஹால் டிக்கெட் ஐடி தொலைந்தால் மாணவிக்கு நேர்ந்த சம்பவம் ?
Next articleசரிந்தது தங்கத்தின் விலை! மக்களே தங்கம் வாங்க தயாராக இருங்க! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!