பால் காய்ச்சும் வீட்டில் மாவிலைத் தோரணங்கள் கட்டுவது ஏன்..?

0
172

புதுமனை கட்டி முடிந்து அதற்கு புகுவிழா நடத்தும் போது மாவிலைத் தோரணம் கட்டுவது வழக்கம். இதன் பயன்கள் தெரியாவிட்டாலும் இவ்வாறு செய்வதில் பெரும்பான்மையான மக்கள் கருத்தாக இருந்து வருகின்றனர்.

பொதுவாக பால் காய்ச்சும் சடங்குகள் பற்றி அனைவரும் அறிந்திருப்போம்.
பால் காய்ச்சும் வீட்டுக்கு செல்லும் போது நம்மை முதலாவதாக வரவேற்பது வாசலில் கட்டியிருக்கும் மாவிலைத் தோரணங்கள் தான். ஆனால், இதை யாரும் ஒரு பொருட்டாக கூட கண்டுகொள்வதில்லை.

மாவிலைத் தோரணத்தில் உள்ள மகிமைகளை பண்டை காலத்திலேயே அறிந்திருந்ததனால் தான் இந்த வழக்கம் இன்றும் உள்ளது. பால் காய்ச்சும் சடங்கு என்றில்லாமல் எல்லா முக்கிய சடங்கிற்கும், சிலர் மாவிலையை பயன்படுத்துவதுண்டு.

பால் காய்ச்சும் சடங்கிற்காக அதிகம் பேர் அந்த வீட்டிற்கு வந்து செல்வதுண்டு. அப்படி அதிகம் பேர் வந்து சேரும் இடத்தில் இயற்கையாகவே வாயு அசுத்தமாகும். இந்த அசுத்த வாயுவை சுத்தம் செய்யும் திறன் மாவிலைக்கு உள்ளது. இதற்காகத்தான் மாவிலையை வாசலிலும் வீட்டிற்குள்ளும் கட்டுகின்றனர். ஆனால், தற்போதெல்லாம் இதற்கு பதிலாக மாவிலை வடிவில் உள்ள பிளாஸ்டிக் இலைகளை கட்டுகின்றனர். இதனால் எந்தவித பயனுமில்லை என்பதுதான் உண்மை.

மேலும், மாவிலைக்கு நோய் அணுக்களின் சக்தியை அழிக்க இயலும் என்று அறிந்த முன்னோர்கள் மாவிலையால் பல் துலக்குவதும் உண்டு.

Previous articleஉங்கள் குழந்தைகளின் வயிற்று குடல் புழு வெளியேற அருமையான வைத்தியம்!
Next articleகரீபியன் லீக் : நூலிலையில் சதத்தை தவறவிட்ட சிம்மொன்ஸ்