இன்றைய ராசி பலன் 06-09-2020 Today Rasi Palan 06-09-2020

Photo of author

By Kowsalya

இன்றைய ராசி பலன்- 06-09-2020

நாள் : 06-09-2020

தமிழ் மாதம்:

ஆவணி 21, ஞாயிற்றுக்கிழமை.

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை.

இராகு காலம்:

மாலை 4.30 முதல் 6.00 வரை.

 எம கண்டம்:

மதியம் 12.00 முதல் 1.30 வரை.

குளிகன்:

பிற்பகல் 3.00 முதல் 4.30 வரை,

திதி:

சதுர்த்தி திதி இரவு 07.07 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி.

நட்சத்திரம்:

அஸ்வினி நட்சத்திரம் பின்இரவு 05.23 வரை பின்பு பரணி.

சித்தயோகம் பின்இரவு 05.23 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமண முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்றைய நாள் நேர்மையே குறிக்கோளாக கொண்டிருக்கும் உங்கள் ராசிக்கு எதையும் எதிர்கொள்ளும் தைரியம் உருவாகும். பொருளாதார நிலை சீராக இருப்பதால் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்று பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். திருமண சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்றைய நாள் இனிய நாளாக அமைகிறது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த போட்டிகள் நீங்கும். குடும்பத்தில் மன நிம்மதியான சூழ்நிலை இருக்கும். உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ளும் நேரம் இது. எல்லா விஷயத்திலும் நீங்கள் விட்டுக்கொடுத்துச் செல்வதால் நல்லது நடக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களை தடையின்றி செய்து முடிக்க கடின உழைப்பு தேவை. நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலப்பலன் கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்றைய நாள் கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பரஸ்பர அன்பு நீடிக்கும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். ஆடம்பர பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபார ரீதியான மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து பொறுமையாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். உடல்நிலையில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்றைய நாள் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் தைரியம் உங்களுக்கு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் இடத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றமான பலன்களைப் பெறலாம். ஊதிய உயர்வு, இடமாற்றம் ஒரு சிலருக்கு உண்டாகும். உறவினர்கள் வருகையால் மனம் மகிழும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். அசையா சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்றைய நாள் எதிர்பாராத லாபம் கிடைக்கப்பெறும். பொருளாதார ரீதியாக பணவரவு சீராக இருந்தாலும் சிக்கனமுடன் செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும்