ரேஷன் பொருட்கள் வாங்க இனி கைரேகை வைத்தால் மட்டுமே வாங்க முடியும்!! தமிழக அரசின் புதிய திட்டம்

Photo of author

By Parthipan K

ரேஷன் பொருட்கள் வாங்க இனி கைரேகை வைத்தால் மட்டுமே வாங்க முடியும்!! தமிழக அரசின் புதிய திட்டம்

இனி ரேஷன் கடைகளில் பொருள் வாங்க கைரேகை வைத்தால்தான் பொருள்க்கள் பெற முடியும் என புதிய திட்டம் தமிழக அரசு அமல் படுத்தப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் பொருட்களை அதிக அளவில் முறைகேடு நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.ரேஷன் கடைகளில் அரிசியை விலைக்கு விற்பதும் , ரேஷன் பொருட்களை அதிக விலைக்கு வெளியே விற்பனை செய்யப்படுவதாகவும் அடிக்கடி புகார் வந்த வண்ணம் இருக்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் அதிரடி சோதனையில் ஈடுபடும் பொழுது டன் கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருகின்றனர். நடவடிக்கை எடுத்த பின்பும் ரேஷன் கடைகளில் முறைகேடு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது.

அதனை தடுக்கும் வகையில் குடும்ப உறுப்பினர்கள் கைரேகையுடன் ரேஷன் பொருட்களை வழங்க அரசு திட்டமிட்டது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் முறைகேடுகளை தடுக்க கைரேகை வைக்கும் புதிய நடைமுறையை நாளை முதல் அமல்படுத்த உள்ளனர். அதன்மூலம் குடும்ப அட்டையில் இருப்பவர்கள் யாரேனும் ஒருவர் கைரேகை வைத்தால் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும் என்றும் ஒருவர் அட்டையை மற்றொருவர் பயன்படுத்துவதால் தடுக்க முடியும் என்றும் கூறியுள்ளனர். வசதியாக இருப்பவர்கள் கைரேகையை வைத்து பொருட்கள் வாங்க தயாராக இல்லை என்பதால் அரசு ரேஷன் செலவு மிச்சமாகும் என கூறப்படுகிறது.

அதேபோல தேவை இருப்பவர்கள் மட்டுமே ரேஷன் பொருட்கள் வாங்க இந்த புதிய நடைமுறை வழிவகுக்கும் என்றும் ஒரு நாளில் எல்லா பொருட்களையும் பொருள்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் பொருட்களை முறைகேடு நடப்பது படிப்படியாக தடுக்க முடியும் என்றும் விரைவில் எல்லா மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை அமல்படுத்தப் போவதாக கூறிகின்றனர்.