இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

Photo of author

By Parthipan K

இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

வேலூர் மாவட்டத்தில் வசித்து வரும் 33 வயது நபரை திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோர்கள் வற்புறுத்தியதால் இளம்பெண்  செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதிக்கு அருகேயுள்ள புதூர் மேடில் ,சாமி நாதன் என்பவர் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். அவரின் மூத்த மகளின் பெயர் கல்பனா. இவர் வேலூர் இருக்கும் டி.கே.எம் பெண்கள் கல்லூரியில் எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவருக்கு கடந்த ஒரு வருடமாக திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். கடந்த வாரம் ஒரு மாப்பிள்ளை வந்து இவரைப் பார்த்துவிட்டு சென்றனர். அவருக்கு வயது 33. வங்கி ஒன்றில் வேலை பார்ப்பதாகவும், பெண்ணை பிடித்து விட்டதாகவும், திருமணத்திற்கு சம்மதம் என்று கூறி விட்டு அவர்கள் சென்றனர்.

ஆனால் ,கல்பனாவிற்கு மாப்பிள்ளை வயது அதிகமாக இருப்பதாகவும் ,இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்றும் பெற்றோரிடம் கூறியுள்ளனர். ஆனால் பெற்றோர்கள் இந்த மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்.

இதனால் மனவேதனையடைந்த கல்பனா ,நேற்று இரவு வழக்கம் போல தன்னுடைய அறையில் தூங்க சென்று உள்ளார் .சிறிது நேரத்தில் அவர்கள் அறையிருந்து பயங்கர சத்தம் கேட்டது. அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரின் அறைக்குள் சென்று பார்த்தபோது, கல்பனா பிளேடால் கழுத்தை வெட்டிக் கொண்டு இருப்பதை பார்த்து கதறி கூச்சலிட்டனர்.

இந்த சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக வந்த கல்பனாவை அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். மேலும் இதனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிக வயது உடையவரை திருமணம் செய்து கொள்ள விரும்பாத அப்பெண் பெற்றோர்கள் வற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.