இ-பாஸ் இல்லையா?  திரும்பி போ! ஏற்காடு மலைக்கு படையெடுக்கும் மக்கள்! திருப்பி அனுப்பும் போலீசார்!

Photo of author

By Kowsalya

இ-பாஸ் இல்லையா?  திரும்பி போ! ஏற்காடு மலைக்கு படையெடுக்கும் மக்கள்! திருப்பி அனுப்பும் போலீசார்!

தமிழகம் முழுவதும் இ-பாஸ் ரத்து செய்து அனைத்து சுற்றுலா தளத்திற்கு செல்ல‌ அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஏற்காடு மலை பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் குவிந்ததனால் இ-பாஸ் இல்லாத மக்களை போலீசார் திருப்பி அனுப்பியுள்ளனர்.

கொரோனா காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 5 மாதங்களாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது.

எட்டாம் கட்ட ஊரடங்கு செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30 வரை அமல்படுத்தப்பட்டு ஒரு சில தளர்வுகளையும் தமிழக அரசு அளித்தது.

இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் 8 ஆம் கட்ட ஊரடங்கில் ஞாயிற்றுக் கிழமையில் கடைபிடிக்கப்பட்ட முழு ஊரடங்கை ரத்து செய்து தளர்வு கொடுக்கப்பட்டிருந்தது.

மேலும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் இபாஸ் அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமைகளில் கடைபிடித்து கொண்டிருந்த முழு ஊரடங்கு ரத்து செய்ததால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலை பகுதிக்கு செல்ல குவிந்துள்ளது.

ஏற்காடு அடிவாரத்தில் போலீசார் நிறுத்தி அனைவரிடமும் இபாஸ் உள்ளதா என பரிசோதனை செய்துள்ளனர்.

இ-பாஸ் பெற்றவர்களை மட்டுமே ஏற்காடு மலை பகுதிக்கு செல்ல அனுமதித்துள்ளனர். மற்றவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதனால் இ-பாஸ் பெறாத மக்களை திருப்பி அனுப்பியதால் மக்களுக்கும் அங்கு உள்ள காவலர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து மாவட்ட காவல்துறை கூடுதல் பாதுகாப்பாளர் அன்பு சம்பவ இடத்திற்கு வந்து, சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலை சுற்றுலா பகுதிக்கு செல்ல வேண்டுமென்றால் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். இ-பாஸ் பெற்ற பிறகே செல்ல அனுமதி வழங்கப்படும் என்று அறிவுறுத்திய பின் மக்கள் கலைந்து சென்றனர்.

நூற்றுக்கணக்கான மக்களின் வருகையால் ஏற்காடு சுற்றுலா தளத்தில் கொரோனா அதிகமாகப் பரவும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.