சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு!

0
112

குடிநீர் தேவைக்காக சாத்தனூர் அணையில் இருந்து நாளை முதல் ஆறு நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து குடிநீர் தேவைகளுக்காக தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விட பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக்கோரிக்கையை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து நாளை (9.9.2020) முதல் ஆறு நாட்களுக்கு 264.38 மி.க. அடி நீரினை குடிநீர்
தேவைகளுக்காக சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில் எல்லீஸ் அணைக்கட்டு வரை தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாகவும் இதனால், விழுப்புரம் மாவட்டம் குடிநீர் வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

Previous articleவேப்பூர் அருகே கார் மீது லாரி மோதியதில் 4 பேர் பலி!
Next articleதிருடனுக்கு வந்த சோதனை : திருடிய செல்போனை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்த திருடன் !