மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்:! மன அழுத்தத்தை தீர்த்துவைக்க கட்டணமில்லா புதிய 24×7 ஹெல்ப்லைன் சேவை அறிமுகம்!

0
117

மக்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதும் தன் பிரச்சனையை வெளியே தெரிந்தால் அவமானம் ஏற்படும் என்றும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களுக்கு ஒரு மருந்தாக அமைய உளவியல் ஆதரவை வழங்குவதற்காக 24 x 7கட்டணமில்லா மனநல மறுவாழ்வுகளுக்கான ஹெல்ப்லைனை (Helpline) மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை ‘கிரன்’ (1800-599-0019) என்ற ஹெல்ப்லைனை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தாவர்ச்சந்த் இதனை தொடங்கி வைத்தார்.

இதன்மூலம் முதலுதவி, உளவியல் ஆதரவு ,துன்ப மேலாண்மை மனநலம், மன அழுத்தம், நேர்மறையாக நடந்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு மனநல மறுவாழ்வு சேவையை கிரண் வழங்கும் என்று அமைச்சர் கூறினர்.

மேலும் அவர் தனிநபர்கள், தன்னார்வலர்கள், குடும்பங்கள் ,பெற்றோர் சங்கங்கள், தொழில்முறை சங்கங்கள், புனர்வாழ்வு நிறுவனங்கள், மருத்துவங்கள் அல்லது நாடு முழுவதும் ஆதரவு தேவைப்படும் என்பவர்களுக்காக இந்த ஹெல்ப்லை 13 மொழிகளில் 24 x 7 நேரமும் ஆலோசனை குறித்து வழங்கும் என்று கூறியுள்ளார்.

மனநோயால் பாதிக்கப்படுபவர்கலுக்கு ஒரு குடும்ப உறுப்பினர்களாக இந்த ஹெல்ப்லைன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அமைக்கர் கூறினார்.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் இணைச்செயலாளர் பிரபோப் சேத் ,பிஎஸ்என்எல்-இன் (BSNL) தொழில்நுட்ப ஒருங்கிணைப்புடன் இந்த கட்டணமில்லா ஹல்ப்லைன் 24 மணி நேரமும் வாரத்திற்கு ஏழு நாளும் செயல்படும் என்றும் ,இதில் 606 மருத்துவம் மற்றும் மறுவாழ்வு உளவியலாளர்கள் மற்றும் 668 மனநல மருத்துவர்கள் கொண்டு செயல்படும் என்று அமைச்சர் கூறினார்.

மேலும் மனநலமறுவாழ்வுக்களுக்கான ஆலோசனையை தமிழ், இந்தி, மராட்டி ,ஒடிசா ,தெலுங்கு ,மலையாளம், குஜராத்தி ,பஞ்சாபி ,கன்னடம், ,பெங்காலி ,உருது மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் செயல்படுவதாக அமைச்சர் கூறினார்.

Previous articleகொரோனா வைரஸ்தான் கடைசி என நினைத்து விடாதீர்கள்
Next articleபென் ஸ்டோக்ஸின் தந்தைக்கு நேர்ந்தது என்ன?