கங்கனாவின் படத்தை புறக்கணித்த பாலிவுட் பிரபலம்!

Photo of author

By Parthipan K

கங்கனாவின் படத்தை புறக்கணித்த பாலிவுட் பிரபலம்!

Parthipan K

கங்கனா ரனாவத் சமீபத்தில்  சுஷாந்த் சிங் மரணத்திற்கு கருத்து பதிவிட்டு சிவசேனா  கட்சிகளின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டார்.

இந்த சூழலில் சிவசேனாவுக்கு சவால் விடுத்து மும்பைக்கு வந்த வந்தனாவின் திரையுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணத்தில் பலர் செயல்பட்டு வருவதாக தெரிகிறது.

ஏனென்றால் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கங்கனாவின் படத்தில் பணிபுரிய இஷ்டமில்லை என்று பகிரங்கமாக டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இவரைப்போலவே பலர் இதுபோன்ற கருத்துக்களை பதிவிட்டு  கங்கனாவின் செயல்பாடுகளை விமர்சித்து வருகின்றனர்.இவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்த கங்கனா, என்னுடன் பணிபுரிய உங்களுக்கு சம்மதம் இல்லை என்றால் நான் தான் கவலைப்பட வேண்டும் அவ்வளவு பெருமைக்குரியவர்கள் நீங்களெல்லாம். உங்கள் ஆளுமைகளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று   ஊசியில் வாழைப்பழத்தை நுழைப்பது போல் மறைமுகமாக குத்தி காமிக்கிறார்.