பிரபல தமிழ் பட வில்லன் திடீர் மரணம்!

2003 ஆம் ஆண்டு வெளியான தல அஜித்தின் “ஆஞ்சநேயா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வில்லனான அறிமுகமானவர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி.

அதன்பின் ஆறு, தர்மபுரி போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களுக்கு பரிச்சயமானார்.

நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியான உத்தம புத்திரன் படத்தின் மூலம் இவர் விவேக் உடன் சேர்ந்து காமெடி செய்தது இன்று வரை பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

இன்று அவருக்கு திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பிரபல தமிழ் பட வில்லன் திடீர் மரணம்!

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்கள் நடித்து சினிமா துறையின் ஜாம்பவானாக வலம் வந்தார். இவருடைய மரணத்திற்கு திரை உலக பிரபலங்களும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

 

Leave a Comment