இந்தியாவில் இதுவரை 77.77% பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்!

0
121

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 89,706 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,70,128 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,115 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 73,890 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 74,894. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 33,98,844 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 77.77% பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்றைய தேதியில் 8,97,394 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,54,549 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 5,18,04,677 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleகள்ளக்குறிச்சியில் கொரோனா தடுப்பு விதிமீறல்களுக்கு அபராதம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!
Next articleதனியார் கம்பனியால் கடத்தப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள லேப்-டாப்கள்