5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் வேண்டாம்! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

0
125

5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் வேண்டாம்! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்துமாறு பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் கண்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆபாச தளங்கள் இடை இடையே வந்து சென்று மாணவர்களை இடையூறு செய்வதாக குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் ஐந்து நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

செய்தியாளரை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் மாணவர்களின் மனநலம் மிகவும் பாதிக்கப்படுவதாலும், மன அழுத்தத்திற்கு உள்ளாவதாலும் ஐந்து நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த உத்தரவை மீறி ஆன்லைன் வகுப்புகள் எடுத்தால் கண்டிப்பாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் ஆன்லைன் வகுப்புகள் நடக்கிறதா என்று தனிக்குழு அமைத்து கண்காணிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

கொரோனா பரவல் தொற்று அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

 

 

 

 

Previous articleவிவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் மோசடி : தமிழக வேளாண் துறை செயலர் கூறும் தகவல் !!
Next articleபிறந்த 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் :!