குன்னம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு!

0
183

குன்னம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராமச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாதாரண பொதுமக்கள் உள்பட பிரபலங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர்கள் என பலரும் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குன்னம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராமச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட எம்.எல்.ஏ. ராமச்சந்திரனுக்கு பரிசோதனையின் போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

Previous articleஅமீரகத்தில் தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள்
Next articleஇரண்டாவது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்த வீராங்கனை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here