தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னனி வீரர் வேற நாட்டுக்கு குடியேற போகிறாரா

Photo of author

By Parthipan K

ஜான்டி ரோட்ஸ் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பீல்டிங் பயிற்சியாளராக இருந்தார். இந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை பீல்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா அணியின் தலைசிறந்த பீல்டராக திகழ்ந்தவர் ஜான்டி ரோட்ஸ். இவர் சுவீடன் கிரிக்கெட் பெடரேசன் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் குடும்பத்துடன் சுவீடனில் குடியேற இருக்கிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே சுவீடன் கிரிக்கெட் பெடரேசனுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. கடந்த மூன்று மாதங்களில் சிறந்த ஒப்பந்தம் நிகழ்ந்துள்ளது. எனது குடும்பத்துடன் சுவீடனில் குடியேற இருக்கிறேன் என்று கூறினார்.