ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

0
127

மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் பாடங்கள் முன்பு போலவே தொடர்ந்து நடக்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஒரு அரசு என்பது என்ன செய்ய வேண்டுமோ அதை இந்த அரசு சிறப்பாக செய்து வருகிறது என்றும் செப்டம்பர் இறுதி வரை மாணவர்களின் பள்ளி சேர்க்கை தொடர்ந்து நடைபெற உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். புதிய கல்விக் கொள்கை குறித்து அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு ,முழு ஆய்வில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும் ,தமிழகத்தின் என்றும் இரு மொழிக்கொள்கை தான் செயலில் இருக்கும் என்று அமைச்சர் கூறினார்.

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 25 ஆகிய ஐந்து நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் காலாண்டு விடுமுறை நாட்கள் இருக்கும் என்பதால் ஐந்து நாட்கள் மட்டுமே தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அதன் பின்பு மாணவர்கள் ஆன்லைனில் வகுப்பு முன்பை போலவே தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், இது குறித்து முதல்வரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

 

Previous articleஇந்தியாவில் ஒரே நாளில் 96,550 பேருக்கு கொரோனா; 1,209 பேர் உயிரிழப்பு!
Next articleஒசூர் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டதீவிரம் !!