விவசாய மின் இணைப்பை எங்குவேண்டுமானாலும் மாற்றுவது எப்படி?

0
145

தமிழகத்தில் ,விவசாய மின் இணைப்புகளை வேறு எந்த இடங்களில் மாற்ற இயலும்.

தமிழகத்தில், விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு இருந்துவந்த நடைமுறைகள் சிக்கலாக இருப்பதினால், தற்பொழுது அதை எளிமையாக விவசாயிகள் பயன்பெறக்கூடிய வகையில், தமிழக மின்சார வழங்கல் மற்றும் பராமரிப்பு விதிமுறைகளில் சில திருத்தம் செய்யப்பட்டுள்ளது .அதன்படி, குறைந்தபட்சம் அரை ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் கிணறு மற்றும் நிலத்தின் உரிமத்தை கிராம அலுவலரிடம் பெற்று இணைத்தாலே போதுமானது.

இதனால் விவசாய மின் இணைப்பினை தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் . இதற்கான காரணம் எதுவும் தெரிவிக்க தேவையில்லை என்று புதிய திருத்தத்தில் அமலில் உள்ளது. இதற்கு விவசாயிகளிடம் ,நிலம் மற்றும் கிணறு இருந்தால் மின் இணைப்பு மாற்றம் செய்ய அனுமதிக்க போதுமானது.

இதற்கு 15 நாட்களுக்குள் அனுமதி கிடைக்கவில்லை என்றால் விவசாய அவசர நிமித்தம் காரணமாக முறை மாற்ற திறப்பானை இயக்கிக் கொள்ளலாம் என்றும் மின் இணைப்பு பெற்று, தயார் நிலையை தெரிவித்தால், மூன்று நாட்களுக்குள் மின் இணைப்பு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous article9 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி!! கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு அதிர்ச்சியளிக்கும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு!!
Next articleஆறாவது தவணையாக தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி ஒதுக்கீடு.!