இயக்குனர் சசி இயக்கப் போகும் அடுத்த திரைப்படத்தின் ஹீரோ இவரா?

0
224

இதுவரை தமிழ் சினிமாவில் இயக்குனர் சசி இயக்கிய திரைப்படங்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கை கொண்டது. அதாவது 7  திரைப்படங்கள் மட்டுமே இவர் இயக்கியதாகும். எண்ணிக்கையில் குறைவு என்றாலும் இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது என்றே சொல்லலாம்.

நடிகரும்  இயக்குனருமான விஜய் ஆண்டனி உடன் இயக்குனர் சசி இணைந்து இயக்கிய திரைப்படம் பிச்சைக்காரன்.  இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  நடிகர் விஜய் ஆண்டனிக்கு இத்திரைப்படம் ஒரு வெற்றித் திரைப்படமாக அமைந்தது எனலாம்.  இயக்குனர் சசி இயக்கிய திரைப்படங்கள் இன்றும் மக்களிடையே பெரும் அளவில் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 தற்போது இயக்குனர் சசி, Romantic நடிகரான ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார்  என்பது தெரியவந்துள்ளது.  நடிகர் ஹரிஷ் கல்யாண் திரைப்படம் என்றாலே கதாநாயகியுடன்  டூயட் பாடிக் கொண்டே இருப்பதுதான்  என்பது அனைவரும் அறிந்ததே.  ஆனால் இயக்குனர் சசியின் திரைப்படத்தில் அவ்வாறான காட்சிகள் அதிக அளவில் இடம் பெறாது.

 இவர்கள் இருவரும் இணைந்து இயக்கப்போகும் இந்த திரைப்படம் எப்படி இருக்கும் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. நடிகர் ஹாரிஸ் கல்யாணுக்கு  இந்த திரைப்படம் ஒரு புது அனுபவத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் சசி இயக்கப் போகும் அடுத்த திரைப்படத்தின் ஹீரோ இவரா?

Previous articleஅபுதாபியில் கொரோனா பரிசோதனை செய்ய இவ்வளவு பணமா?
Next articleகல்லூரி மாணவியோடு கணவன் ஓடியதால் மனைவி எடுத்த விபரீத முடிவு !! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here