தமிழகத்தில் 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழகத்தில் கட்டமைப்பு வசதி இல்லாத, ஆசிரியா் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் உள்ள 58 கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய ஆசிரியா் கல்விக் குழுமம் ரத்து செய்ததுடன் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் இணைப்பு அனுமதி பெறாத 13 பி.எட். கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட 71 கல்லூரிகளிலும் தடையை மீறி சேர்க்கப்படும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.