திருச்சி ஆயுதப்படைலிருந்து
ஜம்மு காஷ்மீர் லடாக் புறப்படும் வீரர்கள் !! மீண்டும் எல்லை பதற்றம் !
இந்திய சீனா எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாக போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், தற்போது பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளதாக திருச்சி ஆயுதப்படை துறைத் தலைவருக்கு கடிதம் உதவி தளவாய் மூலம் தந்தி செய்தி வந்துள்ளது.
அந்தத் தந்தியில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் ஒரு மாத காலம் பணிபுரிய 1 ஆய்வாளர், 2 சார்பு ஆய்வாளர்கள், 5 அவில்தார்கள் நியமனம் செய்ய திருச்சி ஆயுதப்படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தங்களது நிறும மற்றும் குழுமங்களுடன் ஆலோசித்து அவில்தாரர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை விருப்பமுள்ளவர்கள் ,ஜம்மு காஷ்மீர் லடாக் பகுதியில் பணிபுரிய விருப்பம் தெரிவிப்பவர்களின் விவரங்களை இன்று உடனடியாக அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
இதற்கு விருப்பம் தெரிவிக்கும் நபர்கள் மேற்கண்ட பணி நியமணம் செய்து அனுப்பப்படுவார்கள் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் ,இந்த தகவலானது மிகவும் அவசரம் என்பதால் காலதாமதத்தை தவிர்க்க வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் , திருச்சி ஆயுதப்படையில் பணிக்கு 5 பேர் என தகவல் வெளியாகியுள்ளது.