திமுகவின் நிதியாளர் ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத்துறை வைத்த செக்! சொத்து முடக்கத்தால் கதிகலங்கும் திமுக

0
145

அரக்கோணம் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருடைய பலகோடி மதிப்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறையினர் திடீரென அதிரடியாக முடக்கி உள்ளனர்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகன் முன்னதாக 1995-ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் பேக்டரியை முறைகேடாக வாங்கியுள்ளதாக குவிட்டன்தாசன் என்பவர் சிபிசிஐடி போலீஸில் புகார் அளித்திருந்தார்.

 

அதனடிப்படையில் விசாரித்த போலீஸார் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக்கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு தற்போது நிலுவையில் இருந்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமலே சிங்கப்பூரை சேர்ந்த சில்வர் பார்க் இண்டர்நேசனல் நிறுவனத்தில் ஜெகத்ரட்சகன் முதலீடு செய்துள்ளதாக வந்த தகவலை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

 

மேலும், ஜெகத்ரட்சகன் பெயரிலான முதலீட்டை குடும்பத்தினர் பெயருக்கு விதிமுறைகளை மீறி ஆவணம் செய்து மாற்றப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

 

இந்நிலையில், தமிழகத்தில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான விவசாய நிலங்கள், வீட்டு மனை, வீடு உள்ளிட்ட ரூ.89.19 கோடி மதிப்புடைய சொத்துக்களை தற்போது அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

 

அதேபோல், ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினரது வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous articleஐபிஎல் ரசிகர்களுக்காக புதிய அறிவிப்பை வெளியிட்ட ட்விட்டர்
Next articleஓடிடியில் வெளியாகும் பிரபல நடிகையின் திரில்லர் படம்!