புதிதாக கண்டெடுக்கப்பட்ட 600 ஆண்டு பழமையான சாமி சிலைகள் !!

Photo of author

By Parthipan K

கிருஷ்ணகிரி தென்பெண்ணை ஆற்றில் நூற்றாண்டு முற்பட்ட சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் அருகே 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட சாமி சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனை அருகில் இருந்த அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே எண்ணேகொள்புதூர் ஏகநாதன் உள்ளிட்டோர் தென்பெண்ணையாற்றில் கற்சிலைகளை இருப்பதனைக் கண்டு அவற்றை கரையில் எடுத்து வந்துள்ளனர்.

இதனையடுத்து வரலாற்றுப் பேராசிரியர் விஸ்வபாரதி அவர்களின் தகவலின் பெயரில் கிருஷ்ணகிரி அருங்காட்சியகம் காப்பாட்சியர் கோவிந்தராஜ் செல்வராஜ் செல்வகுமார் மற்றும் வரலாற்று ஆவணப்படுத்தும் குழு தலைவர் நாராயண மூர்த்தி ஆகியோர் சிலையை கண்டனர்.