நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: 17 எம்.பி.களுக்கு கொரோனா தொற்று உறுதி!

0
112

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறுவதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 17 எம்.பி.களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல், சீன எல்லை பிரச்சனை, பொருளாதார வீழ்ச்சி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும் இந்த பரபரப்பான சூழ்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. அக்டோபர் 1ஆம் தேதி வரை தொடர்ந்து 18 நாட்களுக்கு, இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முறையான தனிமனித இடைவெளியை கடை பிடித்தல், முகக் கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றி இந்த மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கப்பட்டது. மேலும், மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைத்து எம்.பி.களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 17 எம்.பி.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எம்.பி.க்கள்:

  • மீனாட்சி லேகி
  • அனந்த் குமார் ஹெக்டே
  • பர்வேஷ் சாஹிப் சிங்
  • சுக்பீர் சிங்
  • ஹனுமான் பெனிவால்
  • சுகனாதா மஜும்தார்
  • கோடெட்டி மாதவி
  • பிரதாப் ராவ் ஜாதவ்
  • ஜனார்தன் சிங்
  • பித்யுத் பரன்
  • பிரதான் பருவா
  • என் ரெட்டெப்பா
  • செல்வம் ஜி
  • பிரதாப் ராவ் பாட்டீல்
  • ராம் சங்கர் கதெரியா
  • சத்ய பால் சிங்
  • ரோட்மல் நகர்
Previous articleஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!!
Next articleகொரோனாவுடன் நீட் தேர்வு எழுத வந்த மாணவனுக்கு தேர்வு எழுத மறுப்பு !! கரூரில் பரபரப்பு