சமூக வலைத்தளமான ட்விட்டர் அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவிக்கும் தளமாக விளங்கி வருகிறது. இதைப்பயன்படுத்தி பெரும்பாலான தலைவர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக சில சமயங்களில் முக்கிய விவகாரங்கள் குறித்து அரசியல் கட்சி தொண்டர்கள் ட்விட்டரில் டிரண்டிங் செய்வதும் வழக்கமாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் தருமபுரி தொகுதியில் பாமகவின் அன்புமணி ராமதாஸை எதிர்த்து திமுகவின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரான டாக்டர் செந்தில்குமார் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
குறிப்பாக பாமகவினரை தொடர்ந்து விமர்சிப்பதையே ஆரம்பத்தில் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வந்தார். சில சமயங்களில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் ட்விட்டர் பதிவில் சென்று இவர் விமர்சனம் செய்தது இவரை ஒரு இரண்டாம் தர அரசியல்வாதி போல மக்களிடம் எடுத்து காட்டியது.
தேர்தலின் போது நானும் அன்புமணியின் சமூகம் தான் என சாதி ரீதியாக மக்களிடம் வாக்கு கேட்ட அவர் பின்னர் வெற்றி பெற்ற பிறகு தன்னை ஒரு சாதி ஒழிப்பு போராளி போல நினைத்து கொண்டு ட்விட்டரில் செயல்பட்டது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.குறிப்பாக இவர் தன்னுடைய விளம்பரத்திற்காக இப்படி செய்து வருகிறார் என பலரால் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்தாலும் இவருடைய பதிவுகளில் பல எழுத்துப் பிழைகள் இருக்கும் அதை எடுத்துக்கொண்டு மற்ற கட்சி தொண்டர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.இது குறித்து ஒரு முறை விளக்கம் அளித்த எம்பி “அடுத்த நிகழ்வுக்கு செல்வதற்கு முன்பு அவசர அவசரமாக நானே பதிவிட்டு செல்வதால் சில தவறுகள் நடப்பது இயல்பானது என்று விளக்கமளித்திருந்தார்.
இந்த நிலையில் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குரல் கொடுத்து வரும் சூழலில் திமுகவை செந்தில்குமார் எம்.பி-க்கு தமிழ் சரியாக படிக்க, எழுத தெரியாது என்று பிரபல தனியார் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.இது அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.ஆரம்பத்தில் அரசியல் விளம்பரத்திற்காக ஒரு சில எழுத்துப்பிழைகளுடன் பதிவிட்டது தற்போது அவருக்கே பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.
தமிழைப் பிழையின்றி எழுத தெரியாது: தர்மபுரி தி.மு.க., எம்.பி., ஒப்புதல் #தமிழ் #பிழை #எழுததெரியாது https://t.co/YWrrV47Lui
— Dinamalar (@dinamalarweb) September 15, 2020
ஆமா உண்மை தான்
ஒன்று இரண்டு
எழுத்து பிழை வரும்.தினமலர் னு
எழுதும் பொழுது
தினமலம் னு
பிழை வந்துட வாய்ப்பு இருக்கு.இது நாட்டுக்கு இப்போ ரொம்ப முக்கியம்.
இதெல்லாம் ஒரு செய்தி என்று எழுதி என்ன சாதிக்க விருப்பம். https://t.co/GWMCEIKmwQ
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) September 15, 2020
இந்நிலையில் இந்த நாளிதழுக்கும் வழக்கம் போல செந்தில்குமார் எம்பி தன்னுடைய ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, “ஆமா உண்மை தான். ஒன்று இரண்டு எழுத்து பிழை வரும். தினமலர் னு எழுதும் பொழுது தினமலம் னு பிழை வந்துட வாய்ப்பு இருக்கு. இது நாட்டுக்கு இப்போ ரொம்ப முக்கியம். இதெல்லாம் ஒரு செய்தி என்று எழுதி என்ன சாதிக்க விருப்பம்” என்று தனக்கு தமிழ் சரியாக தெரியாது என ஒப்பு கொண்டதுடன் அந்த நாளிதழையும் விமர்சனம் செய்துள்ளார்