திமுக ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற ஸ்டாலினின் அறிவிப்பிற்கு அண்ணாமலை விடுத்த எச்சரிக்கை

0
110

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்பது, மாணவர்களை வைத்து அரசியல் செய்யும் செயல் என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

 

நீட் தேர்வு குறித்து அண்மையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வினை முழுவதுமாக தடை செய்வதாக தெரிவித்திருந்தார்.

 

இதுதொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவரான அண்ணாமலை இந்த ஸ்டாலினின் அறிவிப்பை விமர்சித்து பேசியுள்ளார்.

 

கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”நீட் தேர்வு காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டதுதான். நீட் தேர்வு குறித்த தவறான பிரச்சாரம், தற்போது கடினமாக உழைத்து தேர்வுக்குத் தயாராகும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்தி விடும்.

எத்தனையோ காரணங்கள் இருக்கும்போது, நீட்டை வைத்து திமுக அரசியல் செய்ய வேண்டாம்.

மேலும், பிரதமரின் கிசான் உதவி திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதும், கண்காணிப்பதும் மாநில அரசின் பொறுப்பு”என அவர் கூறினார்.

Previous articleகாதல் என்ற பெயரில் படுக்கை அறை வரைச்சென்ற காதலர்கள்:! 16 வயது காதலி 4 மாத கர்ப்பம்! காதலன் போக்சோ சட்டத்தில் உள்ளே!
Next articleஇன்றைய ராசி பலன் 18-09-2020 Today Rasi Palan 18-09-2020