மீண்டும் ரயில் கட்டணம் உயர தொடங்கும் :! ரயில்வே வாரிய தலைமை அதிகாரி அறிவிப்பு !!

0
143

கடந்த சில நாட்களாக ரயில் நிர்வாகம் தொடர்ந்து நஷ்டத்தில் இருந்த வரும் நிலையில், சரக்கு ரயில் கட்டணங்களை கொண்டு சமாளிக்கலாம் என்று ரயில்வே வாரியம் திட்டமிட்டிருந்தது.

ஆனால், பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணங்களை அதிகரித்தால் மட்டுமே ரயில்வே வாரியம் சமநிலை அடையும் என்பதை கருத்தில் கொண்டு , ரயில்வே வாரிய தலைமை நிர்வாகி வி.கே.யாதவ் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக செய்தியாளர்களிடம் பேசிய போது  கட்டண உயர்வு குறித்து தெரிவித்துள்ளார்.மேலும் ,இது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை ரயில்வே அமைச்சகம் விரைவில் வெளியிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்பொழுது ரயில்வே வாரியம் சில ரயில் நிலையங்களை மேம்படுத்த வேண்டிய காரணத்தினால், சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.மேலும் ,கட்டணங்களை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் மற்றும் கட்டண உயர்வினை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பது குறித்தும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இதில் பங்கேற்ற நிதி ஆயோக் தலைமை அதிகாரி அமிர்தா, பயனாளர்கள் ரயில் கட்டண மானியம் சமநிலை தேவை என்று குறிப்பிட்டிருந்தார். கடந்த 2014-15 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி மாதம் கிலோ மீட்டருக்கு 4 காசுகள் ரயில் கட்டணம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து ரயில்வே கட்டணம் மேலும் உயர்த்தப்படும் என ரயில்வே வாரிய தலைமை அதிகாரி கூறியுள்ளார்.

Previous articleதிமுக,அதிமுகவை  ஒரே ட்வீட்டில் அதிர வைத்த  டிடிவி! ஆடிப்போன ஸ்டாலின், எடப்பாடி!
Next articleகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பேடிஎம் செயலி !!