சேலம்: 60 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை !

சேலம்: 60 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை !

ஆடு மேய்க்கச் சென்ற 60 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் அரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி லட்சுமி. இவருக்கு 60 வயதாகிறது. குடும்ப தகராறு காரணமாக கணவரை பிரிந்து பத்து வருடங்களாக மல்லூர் பகுதியில் உள்ள சிறிய வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்தப் பகுதி காட்டுப் பகுதியை ஒட்டி உள்ளது.

இந்த பகுதியில் உள்ள கல்குவாரிக்கு தினமும் கூலி தொழிலாளியாக சென்று வந்துள்ளார். கொரோனா காரணமாக கல்குவாரிக்கு ஆட்களை நியமனம் செய்யப்படாததை அடுத்து மூடப்பட்டதால் ஆடு மாடுகளை மேய்த்து வந்துள்ளார்.

நேற்று ஆடு மாடுகளை காலையில் மேய்க்க சென்றுள்ளார். இரவு ஆனதும் ஆடு மாடுகள் வீட்டிற்கு திரும்பி உள்ளன. ஆனால் லட்சுமியை காணவில்லை.

லட்சுமியை காணாததால் அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள் அவரை தேடிச் சென்றுள்ளனர். அப்பொழுது அரை நிர்வாணத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இலட்சுமி இறந்து கிடந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு போலீசார் லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் மருத்துவமனைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.பாலியல் பலாத்காரம் செய்தவர்களை போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment