இந்த ஆவணத்தை காண்பித்தால் மட்டுமே அண்ணாமலையாரை தரிசிக்க முடியும்!! கோவில் நிர்வாகம்!

0
172

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் இன்று முதல் அடையாள அட்டையை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்ததால் வழிப்பாட்டு தலங்களில் பக்தர்களுக்கு வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்த நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து கோவிலிலும் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது. பக்தர்கள் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்ய போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று முதல் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி பாஸ்புக் என ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு வந்தால் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அப்படி அடையாள அட்டை கொண்டு வராத பக்தர்கள் கண்டிப்பாக கோவிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Previous articleஇந்தியாவில் ஒரே நாளில் 95880 பேர் குணம்: 1247 பேர் உயிரிழப்பு!
Next article6 அடி பாம்பை சரக்குக்கு சைடிஸாக சமைத்து சாப்பிட்ட மது பிரியர்கள்:! வைரலாகும் வீடியோவால் பரபரப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here