தொடர்ந்து வந்த ஆபாச அழைப்புகள்! கடைசியில் வெளிவந்த சம்பவம்
வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த வேலைக்கார பெண்ணை எஜமானி வேலையை விட்டு நிறுத்தியதால் பழிவாங்குவதற்காக எஜமானியின் செல் நம்பரை ஆபாச தளங்களில் வேலைக்காரப் பெண் பதிவிட்ட சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் மால்வியா நகரின் சிராக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணிபுரிந்து வந்திருக்கிறார். ஆரம்பம் முதல் நன்றாக வேலை செய்த பின் ஒரு நாள் எஜமானியின் நகையை திருடி உள்ளார். அதனால் கோபமடைந்த எஜமானி நகையை வாங்கிக் கொண்டு வேலையை விட்டு அனுப்பியுள்ளார்.
எஜமானியை பழிவாங்க நினைத்த அந்த வேலைக்கார பெண் தனது நண்பர் ஒருவர் மூலம் அந்த எஜமானியின் செல் நம்பரையும் அவரது மாமியாரின் செல் நம்பரையும் ஆபாச தளங்களில் பதிவிடுமாறு வேலைக்கார பெண் நண்பரிடம் கூறியுள்ளார்.
அதனால் எஜமானியின் செல் நம்பருக்கு அடிக்கடி ஆபாச அழைப்புகள் வந்த வண்ணம் இருந்திருக்கின்றன. தொடக்கத்தில் பொறுத்துக்கொண்டு அவர்கள் தொல்லை தாங்க முடியாமல் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த வழக்கை பதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் வலைத்தளத்தில் யார் இந்த வேலையை செய்தது என கண்டுபிடித்தனர். சூரஜ்ஜை பிடித்து விசாரித்தபோது வேலைக்கார பெண் எஜமானி அம்மாவின் செல் நம்பரையும் அவரது மாமியாரின் செல்ல நம்பரையும் வலைதளங்களில் பதிவிடுமாறு எனக்கு அந்த வேலைக்காரப் பெண் சொன்னார்கள் என வாக்குமூலம் அளித்துள்ளான். அந்தப் பெண்ணையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.