துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு!

0
197

கர்நாடக துணை முதல்வர் அஷ்வத் நாராயணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாதாரண பொதுமக்கள் உள்பட பிரபலங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்வர்கள் என பலரும் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடக துணை முதல்வர் அஷ்வத் நாராயணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

https://twitter.com/drashwathcn/status/1307251065658552320?s=20

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சட்டசபை கூட்டத்தொடர் வரவுள்ள நிலையில், நான் கெரோனா பரிசோதனை மேற்கொண்டேன். அதன் முடிவில் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், நான் வீட்டிலேயே என்னைத் தனிமைப்படுத்தி கொண்டேன். மேலும், கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Previous articleஅதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி! ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன?
Next articleசத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here