மருத்துவர்களைத் தாக்கினால் 5 ஆண்டுகள் சிறை..! மத்திய அரசு

0
120

மருத்துவப் பணியாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மழைக்காலக் கூட்டத்தொடரின் 6ஆம் நாளான சனிக்கிழமை அன்று மாநிலங்களவையில் மருத்துவப் பணியாளர்களைத் தாக்குபவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கும் மசோதா மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மருத்துவப் பணியாளர்களை அவமதிப்பது அல்லது தாக்குவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனாவுக்கு எதிரான போரில் அர்ப்பணிப்புடன் தன்னலமில்லாமல் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகிய முன்கள பணியாளர்களை காக்கும் வகையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை காப்பாற்ற முன்நின்று போராடும் அவர்களை காப்பது அரசின் கடமை என்பதை உணர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Previous articleமத்திய அரசின் திட்டவட்டமான முடிவு!நாடு முழுவதும் மும்மொழி  கொள்கையே!
Next articleநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மாரடைப்பால் காலமானார்