திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசிக்க வரும் பக்தர்கள் இந்துக்கள் அல்லாத வேற்று மதத்தினர் மத பதிவு புத்தகங்களில் இனி கையெழுத்திட தேவையில்லை என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிகாகவே இந்த புதிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரான தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
இதுநாள் வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசிக்க வரும் பக்தர்கள் இந்துக்கள் அல்லாத வேற்று மதத்தவர்கள், மத பதிவு புத்தகங்களில் கையெழுத்திட்ட பின்னர் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப் பட்டு வந்துள்ளனர்.
சுவாமி தரிசனத்தில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், சோனியாகாந்தி உள்ளிட்டோர் வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கையெழுத்திட்ட பின்னர் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வேற்று மதத்தை சேர்ந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஏன் கையெழுத்து பெறப்படவில்லை என தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளிக்கும் வகையில் திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு, ஒய்.வி.சுப்பாரெட்டி இதற்கான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். இதில் இனி திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசிக்க வரும் பக்தர்கள் மத பதிவேட்டில் கையெழுத்திட தேவையில்லை என்றும், ஏழுமலையான் மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே போதுமானது என்றும் கூறியுள்ளார்.
வரும் 23-ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருடசேவை நடைபெற இருப்பதால், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பட்டு அங்கவஸ்திரம் தலையில் சுமந்து சென்று கோயிலுக்கு வருவதாக உள்ளார்.
மத பதிவிட்டு முறை முற்றிலும் ரத்து செய்யப்பட்டதற்கு ஜெகன்மோகன் ரெட்டி கோயிலுக்கு வருவது தான் காரணம் என்று தெலுங்கு தேசம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.மேலும், இது இந்து சமயத்தின் தேவஸ்தானம் எடுத்துக்கொள்ள தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.இதனால் கோவிலின் புனிதத்தை கெடுக்கும் செயல் ஆகும் என்றும், கோடிக்கணக்கான பக்தர்களின் மனம் புண்படும் படியான செயலாக இருக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், இந்த செயலானது ஜெகன்மோகன் ரெட்டியின் ஆன்மீக துரோகம் ஆகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஏழுமலையான் கோயிலில் தரிசிக்க வரும் பக்தர்கள் நம்பிக்கையுடன் வழிபட வேண்டும், வேற்று மதத்தினராக இருப்பினும் அது நல்லதுதான் என்று கூறியவர், திருக்கோயிலின் சட்டத்தை மீறுவது குற்றம் என்று கூறியுள்ளார்.
தற்பொழுது நீக்கப்பட்டுள்ள மத பதிவேட்டு முறையை கொண்டு நம்பிக்கை இருப்பர்கள் கோயிலுக்கு செல்லலாம் என்றால், யார் யாருக்கு நம்பிக்கை இருக்கிறது என்று எப்படி தெரியும் என்று சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.