துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி – அவருக்கு நடந்தது என்ன?

0
147

அதிமுக கட்சியை சேர்ந்த,  துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று காலை திடீரென்று  உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அதிமுக கட்சியில் தற்போது பரபரப்பு நிலவிவருகிறது.

மேலும் கடந்த வெள்ளிக்கிழமை,  அதிமுக கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில்,”11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு கட்சியின் வழிகாட்டுதல்களை கண்காணிக்கப்பட வேண்டும்” என்று ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த கோரிக்கை பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதற்கொண்டு அதிமுக கட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கும் யாரும் அந்த கோரிக்கை பற்றி மேற்படி  ஆலோசிக்கவில்லை, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் ஓபிஎஸ் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் என்று சொல்லப்படுகிறது.

மேலும் தற்போது ஓபிஎஸ் அவர்களுக்கு ஸ்கேன் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஓபிஎஸ் அவர்கள் வீடு திரும்பியுள்ளார்.  ஏற்கனவே இவர் இதயவியல் சிகிச்சை பெற்று பின் மருத்துவர் ஆலோசனைப்படி செயல்பட்டுக் கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleகுடித்துவிட்டு சித்திரவதை செய்த மனைவி! தனக்கும் தன் பெற்றோருக்கும் ஆதரவு கேட்ட கணவர்!
Next articleகட்சிக்கு ஆன்லைன் மூலம் ஆள் சேர்க்கும் திமுக! ஸ்டாலினின் புது திட்டம்!