இரண்டாக பிரிக்கிறது இந்திய அணி? எங்க ரெண்டு பேருக்கும் சண்டைதான்! வீரர் அதிரடி!

0
180

இந்திய அணி நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதியில் இருந்து வெளியேறியது. இதற்கு பிறகு பல விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. அடுத்து இந்திய அணி மேற்கு இந்திய தீவு அணியுடன் மோத உள்ளது. இதற்கு வீரர்கள் அறிவிக்க பட்ட நிலையில் அனைவரும் தயாராகி வருகின்றனர். இது எல்லாம் போக ரோஹித் சர்மாவுக்கும் விராட் கோலிக்கும் இடையே மோதல் என அண்மைக்காலமாகவே பேசப்பட்டுவருகிறது.

சர்வதேச ஐசிசி தரவரிசையிலும் இந்திய அணியிலும் டாப் 2 பேட்ஸ்மேன்கள் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும்தான். விராட் கோலியின் கேப்டன்சி மீது கடும் விமர்சனங்கள் உள்ளன. அதேநேரத்தில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி பல தருணங்களில் அனைவரையும் கவர்ந்துள்ளது.

ஆசிய கோப்பையில் விராட் கோலி ஆடாத நிலையில், அந்த தொடரில் கேப்டனாக செயல்பட்ட ரோஹித் சர்மா, அணியை சிறப்பாக வழிநடத்தி ஆசிய கோப்பையை வென்றுகொடுத்தார். இவ்வாறு கேப்டனாக செயல்பட கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார் ரோஹித் சர்மா.

ஆசிய கோப்பையை வென்றபிறகு அதிர்ச்சியான ஒரு அறிவிப்பை கொடுத்தார். இந்திய அணியின் முழுநேர கேப்டனாக தன்னை நியமித்தால், கேப்டனாக செயல்பட தயார் என்று அதிரடியாக பேட்டி கொடுத்தார். அப்போதே ரோஹித்தின் கேப்டன்சி ஆசையும் கோலிக்கும் அவருக்கும் இடையே பனிப்போர் நடந்துவருவதும் தெரியவந்தது.

உலக கோப்பை தோல்விக்கு பின்னர் மீண்டும் ரோஹித் , கோலி மோதல் குறித்த விவாதம் எழுந்தது. கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோஹித்தின் ஆலோசனையை பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் அணி தேர்விலும் அது எதிரொலித்ததாகவும், ரோஹித் , கோலியின் தலைமையில் இரண்டு பிரிவுகள் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், கோலியுடனான மோதலை உறுதிப்படுத்தும் விதமாக ரோஹித் சர்மாவின் செய்கை அமைந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே விராட் கோலியை அன்ஃபாலோ செய்திருந்த ரோஹித் சர்மா, தற்போது கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவையும் அன்ஃபாலோ செய்திருப்பதாக மும்பை மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க : பிஜேபி -யில் இணைந்தார் தல தோனி? ஜார்கண்ட் முதல்வர் ஆகிறார்!

மேலும் படிக்க : இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கீப்பர் யார் தெரியுமா?

ரோஹித் சர்மாவின் இந்த செயல், கோலியுடனான மோதலை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் தொடர் தொடங்கவுள்ள நிலையில், ரோஹித் சர்மாவின் இந்த செயல், பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.எது என்னவோ இருவரும் நல்ல திறமையான வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. யார் கேப்டன் என்பதை இந்திய அணி தேர்வு குழு தான் முடிவு செய்யும்.

மேலும் படிக்க : தோனிக்கு ஓய்வு! ராணுவ பணிகளில் கவனம் செலுத்த போவதாக அறிவிப்பு

மேலும் படிக்க : திமுக அரசால் சாத்தியமில்லை என்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறும் ஆலோசனை

மேலும் படிக்க : அனுமதியில்லாமல் தடுப்பணை!ஆந்திராவை தமிழக அரசு எச்சரிக்க வேண்டும் என ராமதாஸ் அறிக்கை

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Previous articleஅவையிலேயே கட்சி விட்டு கட்சி மாறிய அமைச்சர்? அதிமுக கலக்கம்! திமுக ஹேப்பி!
Next articleபிஜேபி -யில் இணைந்தார் தல தோனி? ஜார்கண்ட் முதல்வர் ஆகிறார்!