அதிரடியாக எட்டு எதிர்க்கட்சி எம்பிக்களை இடைநீக்கம் செய்த மாநிலங்களவை தலைவர் நாயுடு!

0
126

ஞாயிற்றுக்கிழமை  மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களை எதிர்த்து எதிர்க்கட்சி எம்பிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இவர்களுடைய நடத்தையைப் பற்றி ராஜ்நாத் சிங்,” இன்று இங்கு நடந்தது துரதிர்ஷ்டவசமானது மற்றும் வெட்கக்கேடானது என்றும்,சபையின் கலந்துரையாடல்கள் நடத்துவதே ஆளும் தரப்பின் பொறுப்பும் கடமையும் கூட.

அத்தகைய ஒரு முடிவிற்கு பின்னால் சில அரசியல் காரணங்கள் உள்ளன.அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும், இதுபோன்ற ஒரு சம்பவம் இதுவரை மக்களவை மற்றும் மாநிலங்களவை வரலாற்றில் இதற்கு முன் நடந்தது இல்லை என்றும் கூறினார்.

இன்று இங்கு நடந்தது சபையின் அலங்காரத்திற்கு எதிரானது என்று ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்தார்.அதற்கேற்றார்போல எதிர்க்கட்சி எம்பிக்கள் மைக்கை உடைப்பதும்,அவை விதிமுறைகள் உள்ள புத்தகத்தை கிழித்து  துணைசபாநாயகரின் முகத்தில் எரிவது போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இதனால் கோபமடைந்த மாநிலங்களவைத் தலைவர் நாயுடு தனது இல்லத்தில் ஒரு உயர்மட்ட கூட்டத்தை நடத்தினார். மேலும் அங்கு பணியில் ஈடுபட்ட எம்பிக்களின் மீது உரிமை மீறல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்று எதிர்க் கட்சி எம்பிக்கள் மழைக்காலக் கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.டெரெக்ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜீவ்  சதாம்,சையத்  நஜிஜ் உசேன்,டோலா சென், நீபன் போரா மற்றும்  எலமரன் கரீம் ஆகிய எதிர்க் கட்சி எம்பிக்கள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Previous articleபாலியல் வன்கொடுமை செய்தவரை ஆவியாக வந்து பழி வாங்குவேன் : பாதிக்கப்பட்ட பெண் எழுதிய இறுதிக் கடிதம் !!
Next articleசேலம் – சென்னை நெடுச்சாலை திட்டத்தை கைவிட்டு இருக்கும் மூன்று சாலைகளை வரிவாக்க கோரிக்கை