#Breaking கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிப்பு! தேர்வுகள் உட்பட முழு அட்டவணை வெளியீடு!
கொரோனா வைரஸ் காரணமாக,கடந்த மார்ச் மாதத்திலிருந்து நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்,அனைத்து பள்ளி கல்லூரிகளும் முடக்கப்படும் சூழல் ஏற்பட்டது.தேர்வுகள் நடத்த இயலாத சூழ்நிலையின் காரணமாக, பள்ளி பொதுத் தேர்வுகள் மற்றும் கல்லூரி இறுதியாண்டு தவிர்த்து மற்ற அனைத்து பருவ தேர்வுகள், எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து அனைவரும் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசும் அறிவித்தது.இந்நிலையில் செப்டம்பர் மாதத்திலிருந்து மத்திய அரசால் பல்வேறு துளர்வுகளுடன் நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதில் பொது போக்குவரத்து இயக்கம்,வழிபாட்டுத் தளங்கள் திறப்பு மால்கள் திறப்பு,கட்டுப்பாடுகளுடன் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள்பள்ளிக்குச் செல்ல அனுமதி,போன்ற பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குவதற்கான தேதி மற்றும்,பருவ தேர்வுகள் நடக்கும் கால அட்டவணையை மத்திய கல்வித் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
இதன்படி வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கை நிறைவு செய்து நவம்பர் 1-ஆம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் நவம்பர் மாதத்தில் தொடங்கி,மார்ச் 8 தேதி முதல் 26ம் தேதி வரை செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்றும்,பின்பு ஏப்ரல் 5- ஆம் தேதி முதல் இரண்டாவது செமஸ்டர் ஆரம்பமாகும் என்றும், இதன்பிறகு ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 21ஆம் தேதி வரை இரண்டாவது செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்றும் மத்திய கல்வித் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.