தமிழகத்தில் இந்த நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

0
76

வடக்கு சட்டீஸ்கர் ,ஒடிசா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால், கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் ,அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை நீலகிரியில் 11 சென்டி மீட்டர் மழையும், கோவை வால்பாறையில் 8 சென்டி மீட்டர் மழையும், தேனியில் 7 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மேலும், தென் தமிழகப் பகுதிகளில், காரைக்கால் பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. சென்னை மண்டலத்தை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ,நகரில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, நீலகிரி ,சேலம் போன்ற மாவட்டங்களில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் கூறியுள்ளது.

மகாராஷ்டிரா ,தென் மேற்கு வங்க கடல்,மற்றும் கடலோர பகுதிகளில் அதிகளவு காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

author avatar
Parthipan K