ஆன்லைன் தேர்வு நடத்த வேண்டும் அல்லது அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்க வேண்டும் : சென்னையில் மாணவர்கள் போராட்டம்
சென்னை திருவல்லிக்கேணியில்,தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பட்டயக் பயிற்சிக்கான தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தவோ அல்லது அனைவரும் தேர்ச்சி பெற்றவராகவும் அறிவிக்கக்கோரி தேர்வு எழுதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கடந்த மாதம் 21-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 7- ஆம் தேதி வரை தேர்வுகளை எழுதுகின்றனர் . இந்நிலையில், இன்று திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ள வெலிங்கடன் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுத வந்த மாணவர்கள் தேர்வை புறக்கணித்து, தங்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என்றும் ,அல்லது அனைவருக்கும் தேர்ச்சி என்று அறிவிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திருவல்லிக்கேணி பகுதியில் சில நேரம் பரபரப்பு நிலவியது.