இந்த ராசிக்கு இன்று உடல் நலத்தில் கவனம் தேவை! இன்றைய ராசி பலன் 26-09-2020 Today Rasi Palan 26-09-2020

Photo of author

By Kowsalya

இன்றைய ராசி பலன்- 26-09-2020

நாள் : 26-09-2020

தமிழ் மாதம்: 

புரட்டாசி 10, சனிக்கிழமை,.

நல்ல நேரம்: 

காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்: 

காலை 9.00 முதல் 10.30 வரை.

எம கண்டம்:

மதியம் 1.30 முதல் 3.00 வரை.

குளிகன்:

காலை 6.00 முதல் 7.30 வரை,

திதி:

தசமி திதி இரவு 07.00 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி.

நட்சத்திரம்:

உத்திராடம் நட்சத்திரம் இரவு 07.25 வரை பின்பு திருவோணம்.

 

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0.

 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இது உங்களுக்கு சிறப்பான நாள். தொழில் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய வேலைவாய்ப்பை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அதே நேரத்தில் தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. சிறிய பிரச்சினையாக இருந்தாலும் மருத்துவரை அணுகி கவனித்துக் கொள்ளுங்கள். இன்றைய நாளில் பெருமாள் வழிபாடு நிம்மதியை தரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்று பொறுமையான செயல்களுக்கு வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் இன்று உயர் அதிகாரிகளைப் பற்றிய ஒரு தவறான சொற்களை பேசக்கூடாது. அப்படி பேசும் பொழுது அது உங்களுக்கு எதிராகத் திரும்பும் வாய்ப்பு உள்ளது.தொழில் முயற்சிகள் முன்னேறும். பிள்ளைகள் வழியாக நன்மை செய்திகள் வரும். தனவரவு உண்டாகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்று காலை பொழுது உங்களுக்கு அற்புதமான நாளாக அமையும். மதியத்திற்கு மேல் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். யாரிடம் அதிகம் பேச வேண்டாம். கலை உலக தொடர்புகள் வெற்றியை தரும் பணவரவு ஓரளவு இருக்கும். உங்களுடைய ஆபத்துக்கள் விலகும். பழைய எண்ணங்கள் வந்துபோகும். அடிமனதில் சிக்கிக் கொண்டிருக்கும் ரகசியங்களுக்கு தீர்வு கிடைக்கும். பெற்றோர்களால் அனுகூலம் உண்டு.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்றைய நாள் நல்ல தன லாபம் வரும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் நிம்மதி யான அனுபவங்கள் ஏற்படும். கல்யாண பேச்சுகள் கைகூடும். பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு எண்ணற்ற வெற்றிகளை அள்ளித் தரும்.உங்களுடைய ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் கைகூடும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். பிரிந்து வாழ்பவர்கள் மீண்டும் ஒன்று இணைவார்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. வீட்டுப் பொறுப்புகள் அதிகரிக்கும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வருமானம் பெருகும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய நாள் உறவினர்களால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பிற்பகலில் இருந்து தன வரவு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். சுப காரியம் கைகூடும். திருமண முயற்சிகள் மேற்கொள்ளும் பொழுது மிக கவனம் தேவை. வியாபாரத்தில் வருமானம் பெருகும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் வரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்றைய நாள் உடல்ரீதியான பிரச்சனைகளை சரிசெய்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கூடுமானவரை கவனமாக இருப்பது நல்லது. சுய தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக அமையும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு எதிர்பார்த்த படி ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு போன்றவற்றில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்று மிகப்பெரிய வெற்றியை தேடி தரும் நாள். தொழில் முயற்சி வெற்றிபெறும். வேலை வாய்ப்புகள் கிட்டும். குலதெய்வ வழிபாடு வெற்றியை பெற்று தரும். பொழுதுபோக்கான விஷயங்களில் இன்று ஈடுபட வேண்டாம். உங்களது பிள்ளைகளின் வாழ்வில் கண்டிப்புடன் செயல்பட்டால் உங்களது பிள்ளைகளின் வாழ்வு உயரும்.