முசிறி தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி!

0
265

முசிறி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. செல்வராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் முசிறி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. செல்வராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கும் முன் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அவருடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்தி கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Previous articleரேஷன் கடையில் இதை செய்தால் அபராதம் வசூலிக்கப்படும்:! கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை!
Next articleபுதுக்கோட்டை சத்துணவு துறையில் 817 பணியிடங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here